ஊட்டியில் முக்கிய இடங்களில் 20 தற்காலிக கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரியில் உள்ள ஊட்டியில் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றார்கள். ஆனால் அங்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் சிலர் பொது இடங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறார்கள்.
இதனால் நகராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் வருகை எந்த இடத்தில் அதிக அளவு உள்ளதோ அந்த இடத்தில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்க திட்டமிட்டு ஏடிசி திடல், காந்தல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 20 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் சந்தோஷமடைந்து இருக்கின்றனர். ஆனால் இந்த தற்காலிக கழிப்பறையில் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி இருப்பதில்லை. ஆகையால் இருபத்தி நான்கு மணி நேரமும் தண்ணீர் வசதி இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.