கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவு அடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி எங்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூலி உயர்வு குறித்து பேச முன்வருவதில்லை. இதற்கு மாறாக தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி விடுவதாக மிரட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக ஈரோட்டில் கூலி உயர்வு குறித்து கோரிக்கை வைத்தும், பேச்சுவார்த்தை நடத்தியும், ஒப்பந்தம் போட்டும் கூலி உயர்வு கொடுத்து வந்த நடைமுறையை நீக்கிவிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த பிரச்சனை குறித்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்களுக்கான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.