கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நிலக்கரி லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதனை அடுத்து நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.