குடிநீர் பாட்டிலில் கொசு கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்துள்ள நைனார்பாளையம் பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கினார். அதன்பின் அந்த பாட்டிலை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே கொசு ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கடைக்காரரிடம் கேட்டார்.
அதற்கு அவர் கூறியதாவது, நாங்கள் சின்னசேலத்தில் இருக்கின்ற ஒரு நிறுவனத்திலிருந்து குடிநீர் பாட்டில் வாங்கி விற்கின்றோம். அதற்கு எங்களால் என்ன செய்ய முடியும். இது தொடர்பாக குடிநீர் நிறுவனத்தில் சொல்கின்றோம் என்று தெரிவித்தார். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.