Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரும்பாட்டூரில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைஜின்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சைஜின், சாமிதோப்பு பகுதியை சேர்ந்த தேவ ஜாஸ்பர்(20), பிரவீன்(18) ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த மோட்டார் சைக்கிளை சைஜின் ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் களியக்காவிளையில் இருந்து புறப்பட்ட பேருந்து கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்காக திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக சைஜின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டதால் சைஜின், தேவ ஜாஸ்பர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |