Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உள்ளாடையுடன் ரகளை செய்த ஓட்டுநர்…. முகம் சுளித்த பொதுமக்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

மதுபோதையில் உள்ளாடையுடன் ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து செல்கின்றன. இதனால் அங்கு பயணிகளின் நடமாட்டம் குறைவாக காணப்படும். மேலும் இரவு நேரங்களில் சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வருவது கிடையாது. இந்நிலையில் தற்காலிக பேருந்து நிறுத்த பகுதிக்கு திருத்தணி நோக்கி செல்லும் தனியார் பேருந்து வந்தது. இந்தப் பேருந்து புறப்படுவதற்கு தயாராக இருந்தது.

அப்போது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர், மாற்று ஓட்டுநரிடம் பேருந்தை ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு புறப்படாமல் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து மது குடித்துள்ளார். இதனையடுத்து அந்த ஓட்டுநர் சட்டை மற்றும் பேண்ட்டை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்களும், முதியவர்களும், பேருந்துக்காக காத்திருந்த சில பயணிகளும் முகம் சுளித்தனர். எனவே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Categories

Tech |