தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் 3 மாதத்தில் 6.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழிற்பயிற்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.