திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாற்பத்தி ஒரு நாட்கள் சிறப்பு வழிபாடாக ராம நாம பிரார்த்தனை நாளை தொடங்க இருக்கின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் தொடர்ந்து ராமநாம பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதன்படி நாளை ராம நாத பிரார்த்தனை தொடங்குகின்றது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்ட நிலையில் சென்ற எட்டு மாதங்களாக மாதம் ஒரு முறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றது. இதைத் தொடர்ந்து வருகின்ற 16, 17, 18 உள்ளிட்ட தேதிகளில் சிறப்பு பரிகார பூஜைகள் நடக்க உள்ளது. மேலும் வருகின்ற 25ஆம் தேதி சர்ப்பபலி பூஜை நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாற்பத்தி ஒரு நாட்கள் ராமநாம பிரார்த்தனை நாளை தொடங்க உள்ள நிலையில் ஜூன் 24ஆம் தேதியன்று நிறைவடைகின்றது.