Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை…. “100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல்”… தரமற்ற பொருட்களை விற்பவர்களுக்கு எச்சரிக்கை….!!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாட்டுதாவணி பல மார்க்கெட்டில் சோதனை செய்தபோது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென மாட்டு தாவணியில் உள்ள பழ மார்க்கெட்டில் சோதனையில் ஈடுபட்டார்கள்.

அப்போது 20 கடைகளில் சோதனை செய்த பொழுது 100 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இனி அடிக்கடி சோதனைகள் நடைபெறும். ஆகையால் வியாபாரிகள் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கூறியுள்ளார்.

Categories

Tech |