தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பணமோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் ராபர்ட் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆதித்யா வர்மா, மணிஷ் நாயர் என்ற 2 மர்ம நபர்கள் தாங்கள் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய ராபர்ட் லாரன்ஸ் அந்த மர்ம நபர்களின் வங்கி கணக்கிற்கு 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த ராபர்ட் லாரன்ஸ் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.