Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த கிரானைட் கல்…. தப்பிக்க முயன்ற தொழிலாளி பலி…. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சப்பட்டியில் இருக்கும் தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுல் போரா என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போரா வேலை பார்த்து கொண்டிருந்த போது கிரானைட் கல் ஒன்று கீழே விழுவதை பார்த்துள்ளார். அப்போது உயிர் தப்பிப்பதற்காக போரா கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம் எதிர்பாராதவிதமாக போரா இரும்பு கம்பி மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி போரா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |