ஒரு நாட்டில் வசிக்கும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடியுமா? அதாவது Haiti என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் வெறும் களிமண்ணை சாப்பிடுகிறார்கள். இந்த மண்ணை சாப்பிடுபவர்களுக்கு எந்த ஒரு சத்தும் கிடைக்காது. இருப்பினும் அங்கு வசிக்கும் குழந்தைகள் பசி தாங்க முடியாமல் அழுவதால் பெற்றோர்கள் களிமண்ணை பிஸ்கட் போல் செய்து அதன் மேல் சர்க்கரையை தடவி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.
இதைக் கேள்விப்படும் போது சாப்பாட்டிற்கு மிகவும் பஞ்சமா என கேள்வி எழுகிறது. ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 10 கோடி மெட்ரிக் டன் உணவு வீணாகியது தெரியவந்துள்ளது. இந்த வீணான சாப்பாடை சேர்த்து வைத்தால் ஒரு மலை அளவிற்கு இருக்கும். இப்படி வீணா போகும் சாப்பாடுகளை Haiti பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் களிமண்ணை சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.