Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம்” உலா வரும் யானைகள்…. வனத்துறையினர் எச்சரிக்கை….!!

சாலையோரத்தில் யானைகள் உலா வருவதால் செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியடைந்த காடுகள் பசுமையடைந்துள்ளது. இந்நிலையில் யானைகள் கூட்டம் குட்டியுடன் அங்கு முகாமிட்டுள்ளது. இதனையடுத்து யானைகள் தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்று வருகின்றன. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி பகுதியில் யானை கூட்டம் குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.

இதனால் யானைகள் சாலையை கடந்த பிறகே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, யானைகள் தொடர்ந்து சாலையோரத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் யானைகளின் அருகே செல்ல வேண்டாம் என்றும், செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |