கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வத்தானக்கோட்டை செல்லும் சாலையில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு 50 அடி ஆழம் உடையதாகும். இந்நிலையில் நேற்று காலை உணவு தேடி வந்த புலிமான் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதனையடுத்து மான் தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.