ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கிய தருணமாக உள்ளது. இந்த அழகிய தருணத்தை மிகச்சிறப்பாக செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோரும் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை வினோதமான முறையில் நடத்தியுள்ளனர். அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஆம்பியர் பம்பைர் மற்றும் கேபே ஜெசோப் இருவரும் சண்டை கலைஞர்களாக ஹாலிவுட் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே படங்களில் இணைந்து பணியாற்றிய போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் தங்களது சண்டை கலையை வெளிப்படுத்தும் விதமாக திருமணத்தை நடத்தியுள்ளனர். அதாவது திருமணத்தன்று மணமக்கள் இருவரும் தங்களுடைய உடலின் பின்புறத்தில் தீ வைத்துக் கொண்டு ஸ்டைலாக நெருப்புடன் நடந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தம்பதியின் இந்த வினோத செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், இதனை சிலர் தவறானதாகவும் முட்டாள்தனமான செயலாகவும் விமர்சித்து வருகின்றனர்.