லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லெண்ணபட்டியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக லதா அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்றுள்ளார்.
இவர் தனியார் மண்டபம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி லதா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.