எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத் தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது.
அதாவது எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே.15) நிறைவடைகிறது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் neet.nta.nic.in, nta.ac.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 01140759000 என்ற தொலைபேசி எண் (அல்லது) [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.