மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
உங்களது மனதை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று உங்களின் பணிகளை கையாள்வது கடினமாக இருக்கும். அதிகரிக்கும் வேலை காரணமாக தவறுகள் நேரலாம். இன்று உங்களின் துணையுடன் சகஜமாக பேசுவதன் மூலம் உறவில் திருப்தி நிலவும். இன்று பணத்தை சரியான முறையில் பயன்படுத்த முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நிதிநிலைமை சுமாராக இருக்கும். கவலையின் காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள். தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மன அமைதி பெறமுடியும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களுடன் கூட்டுச்சேர்ந்து படிப்பது நல்லது. இன்று நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.