ஆஸ்திரேலியாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியா வீரர்களான ரோட்னி மார்ஷ் மற்றும் ஷேன் வார்ன் உயிரிழந்தனர். இதனால், கடந்த 5 மாதங்களில் மட்டும் 3 ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்திருப்பது நினைவு கூரத்தக்கது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.