நாம் இன்று தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீப்பெட்டியை ஒரு விஞ்ஞானி அவருடைய சோதனை அறையில் நடந்த ஒரு விபத்து மூலம் கண்டுபிடித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? 1826ல் ஜான் வால்கர் என்பவர் தன்னுடைய சோதனை அறையில் எப்போதும் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பல கெமிக்கல்ஸை ஒன்று சேர்ந்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு சிறிய குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார். அதன்பின் அந்தக் குச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் கெமிக்கல்ஸை போக வைப்பதற்காக அதனை தரையில் போட்டு வேகமாக தேய்த்துள்ளார். அந்த சமயத்தில் குச்சியில் இருந்து திடீரென நெருப்பு வந்துள்ளது. இதனைப் பார்த்த உடனே அவருக்கும் வந்த யோசனை தான் தீப்பெட்டி. அதுமட்டுமல்லாமல் அந்த கால காலகட்டங்களில் மக்கள் அனைவரும் அதிக பணம் கொடுத்து லைட்டர் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் மிக குறைந்த விலையில் வெளியான இவருடைய கண்டிப்பான தீப்பெட்டி அதிக அளவில் விற்பனை ஆனது.
Categories