நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் ராட்சத கல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 5 பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சுமார் 300 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. குவாரியில் சிக்கிய 2 பேர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். பாறை சரிந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Categories