Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 12 மாவட்டங்களில் அலர்ட்…. 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் வலிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி,நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |