தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால் தொடர்ந்து வஞ்சிரம், நெத்திலி, இறால் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மீன் விலை இன்னும் ஒரு மாதத்திற்கு குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories