இன்று இளம் வயதினரையும் விட்டுவைக்காத இதய நோய்கள் வராமல் தடுக்கும், இதயத்தை பலமாக்கும் 5 உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
முன்பு 50 வயதில் வந்த நோய்கள் எல்லாம் இப்பொழுது 25 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிலும் திடீர் மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மாரடைப்புதான். காரணம் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உடல் உழைப்பு இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
விலை அதிகம் கொடுத்து உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் நம் அருகிலேயே கிடைக்கும் அதிக மருத்துவ நன்மைகள் கொண்ட உணவுகளின் அருமை நமக்குத் தெரிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த 5 உணவுகளை ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் அழுத்தம் இதய நோய்கள் பக்கவாதம் புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
1.செம்பருத்தி
செம்பருத்தி அனைத்து இடங்களிலும் சுலபமாக கிடைக்கக்கூடிய ஒன்று. இன்னும் கூட சொல்லப்போனால் அனைவரது வீட்டிலும் கூட இருக்கக் கூடிய ஒன்று.
செம்பருத்தியில் அத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளது. முக்கியமாக செம்பருத்திப்பூ இதய நோய் அணுகாமல் தடுக்க அற்புதமான மூலிகை.
தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும் இதய நோயே வராது. அதேபோன்று இந்தப் பூவை பசுமையாகவும் இல்லை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் தீரும்.
இதை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடையும், ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்படும், வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
இப்படி இதன் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சிவப்பு நிறத்தில் உள்ள ஒற்றை இதழ்களைக் கொண்ட செம்பருத்திதான் மருத்துவ குணங்கள் வாய்ந்தது.
2.ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் இதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை உணவான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
இந்த ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் கால்சியம், விட்டமின் ஏ, சி, ஈ சத்துக்கள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்களும் உள்ளன.
இது உடலில் எலும்பு வளர்ச்சி, இதயத்தை பலப்படுத்த, நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடல் நலனுக்கு உதவுகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. கண் பார்வையில் உள்ள குறைகளையும் நீக்கும்.
3.வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து உடலில் உள்ள செல்களை இருக்கும் எலக்ட்ரோலைட் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
இதில் இருக்கும் விட்டமின் பி6 மற்றும் விட்டமின் சி இதயத்தை படபடப்பில் காக்க உதவுகிறது.
பொட்டாசியம் அதிகம் உள்ள இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், அல்சர் எளிதில் நீங்கும், மன அழுத்தத்தைப் போக்கி மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால் ரத்த சோகை நீங்கி விடும்.
4.பூண்டு
பூண்டு எப்படிப்பட்ட இதயம் சம்பந்தமான பிரச்சினைகளையும் தீர்ப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தினமும் பூண்டு சாப்பிடுபவர்களுக்கு இதயத் தசைகள் வலுவாகும் அதே போன்று இதய ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது.
இதில் உள்ள அலிசின் என்ற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
தினமும் பூண்டு சாப்பிட்டால் எலும்புகள் வலுவாகும் வாயுக் கோளாறுகள் அஜீரணம் பிரச்சினைகள் நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி புற்றுநோய் மாதிரியான கொடிய நோய்களை அண்ட விடாமல் தடுக்க செய்கிறது. அது மட்டும் இல்லாமல் கண் பார்வை திறனையும் தெளிவாக்குகிறது.
5.மாதுளைப்பழம்
மாதுளைப்பழம் இது இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதுதான் மாதுளைப்பழத்தில் ஆரோக்கிய நன்மைகளை மிக முக்கியமான ஒன்று.
தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தின் பணிச்சுமையை குறைக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளையும் சரிசெய்யும். முக்கியமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.
இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்கும். இது ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த சோகையைப் போக்குகிறது.
மாதுளை பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும்.
இதிலுள்ள விட்டமின் சி முடிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதைப்போன்று இதிலுள்ள விட்டமின் ஏ சத்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது.