கடல்வாழ் உயிரினமான டால்ஃபின் மிகவும் புத்திசாலியான உயிரினமாகும். இந்த டால்பின்கள் தன்னுடைய இறையைத் தேடி செல்லாது. அதற்கு பதிலாக கடலின் ஆழம் குறைவான பக்கத்தில் டால்பின்கள் கூட்டமாக சென்று கடலின் அடியில் இருக்கும் சேற்றை தன்னுடைய வாலால் கலக்கி ஒரு வட்டத்தை உருவாக்கும்.
அதன்பிறகு வட்டத்தை சுற்றி டால்பின்கள் நிற்கும். இப்படி செய்வதால் தண்ணீர் கலங்கும். இதனால் மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியே குதிக்கும். அப்போது வெளியே குதிக்கும் மீன்களை வட்டத்தை சுற்றி நிற்கும் டால்ஃபின்கள் பிடித்து சாப்பிடும்.