சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மர்ம நபரை கைது செய்துள்ளனர். மேலும் மர்ம நபரை கைது செய்ததை தொடர்ந்து போலீசார் கூறியதாவது குற்றவாளி ராணுவ சீருடை அணிந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.