Categories
மாநில செய்திகள்

மே 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மே 26ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகின்ற மே 26-ஆம் தேதி தமிழகம் வருகின்றார். இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொளி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் வருகையின்போது அவரைச் சந்தித்த இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன் வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |