நம் வீட்டில் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே பொருள் ஃப்ரிட்ஜ் தான். அதனை நாள் முழுக்க அடிக்கடி திறந்து உள்ளே வைப்பதும் எடுப்பதும் என அடுப்புக்கு அடுத்து அதிகமாக பயன்படுத்த கூடிய பொருள் இது. இதில் எல்லாப் பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசிய பொருள்களை மட்டும் வைத்திருந்தால் மின்கட்டணம் அதிகரிக்காது. உடல் ஆரோக்கியமும் குறையாமல் பாதுகாக்கப்படும். ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது அதற்குப் பின்னால் இருக்கும் இடத்தில் தூசி, அழுக்கு மற்றும் ஏராளமான கெட்ட நீர் தேங்கி இருக்கும். அந்த இடத்தை சுத்தம் செய்து எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் சோப்பு நீர் கலந்து துடைக்க வேண்டும். 50% வினிகருடன் 50 சதவீதம் நீர் கலந்து கரைசலை பிரிட்ஜ் வெளிப்புறம் துடைக்கலாம்.
க்ளாஸ் டாப் ஸ்டவ்:
சமையலறையில் அடுப்பு மீது பெரும்பாலும் வெண்ணைய், எண்ணெய், கிரீஸ் பொருள்கள் சிந்தி இருக்கும். அதனை மென்மையான துணியில் சுத்தம் செய்வது நல்லது. வினிகர் கலந்த சோப்பு அல்லது தண்ணீரை அடுப்பின் மீது ஸ்ப்ரே செய்து, சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு மென்மையான துணியை எடுத்து துடைத்து எடுத்தால் அழுக்குகள் அனைத்தும் அப்படியே வந்து விடும். அடுப்பின் மீது அதிகமாக கரை இருந்தால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
மிக்ஸி:
மிக்ஸி கிரைண்டரில் கரை படிந்து அல்லது துர்நாற்றம் வீசினால் உடனே அதனை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அது உடலுக்கு கேடு ஏற்படுத்தும். எளிமையான முறையில் பேக்கிங் பவுடரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பேக்கிங் பவுடர் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும். அதனை மிக்ஸி ஜாடியில் வெளிப்புறமும் உட்புறமும் நன்றாக தடவி விட்டு 20 நிமிடம் கழித்து அலசி எடுக்கலாம். அழுக்கு மற்றும் கரை முற்றிலும் வந்துவிடும். இப்படி சுத்தம் செய்தால் மிக்ஸி நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
டிஸ்வாஷர் மிஷின்:
வீட்டில் பாத்திரம் சுத்தம் செய்வதற்கு இந்த மெஷின் பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சமையலறை எலக்ட்ரானிக் பொருட்களை சுத்தம் செய்வதில் இதுவும் மிக முக்கியமானது தான்.வீட்டில் இருக்கும் பாத்திரங்களை பளிச்சென்று கழுவி சுத்தமாக வைத்திருக்கும் இந்த மெஷினை நாமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாதனத்தின் கதவை சுற்றியிருக்கும் கேஸ்கட் பகுதியிலும் அழுக்கு தேங்கி இருக்கும். வெள்ளை வினிகரை மேல் ரேக்கில் ஒரு கிண்ணத்தில் வைப்பதன் மூலமாக பாத்திரங்கள் கழுவி பாத்திரத்தில் வாசனை நீக்கலாம். அதுமட்டுமல்லாமல் பாத்திரங்களும் கிருமி இல்லாமல் பளிச்சென்று இருக்கும்
கிரைண்டர்:
கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மாவு சுத்தம் போக கழுவினாலும் அதன் இடுக்குகளில் சில தேங்கி அப்படியே இருக்கும். அது நாளடைவில் அப்படியே உணர்ந்து அந்த இடத்தில் பூச்சியை உண்டு பண்ணும். கிரைண்டரை மாதம் ஒரு முறையாவது முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்ய ஐடோப்ரோபைல் பயன்படுத்தலாம். இது பூஞ்சைகளை கொள்ளும் ஆற்றல் உடையது. கிரைண்டரை சுத்தம் செய்த பின்னர் இதனை கொண்டு நீரில் கலந்து கிரைண்டரில் ஒவ்வொரு பகுதியிலும் விட்டு பிறகு சுத்தமாக துடைத்து எடுக்கவும். புத்தம் புது கிரைண்டர் போல பளிச்சென்று வைத்திருக்க இதனை விடாமல் செய்யலாம்.