வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள்,போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் மற்றும் தடை அமல் படுத்தி வருகின்றது. சங்கர் ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரிவங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூரில் உள்ள சங்கர் ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரி வங்கி மீது ரிசர்வ் வங்கி பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ளது. அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு அல்லது எந்த ஒரு கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கியில் இருக்கும் டெபாசிட்டை வைத்து கடன் வழங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் புதிய கடன்களை வழங்கவும், கடன்களை புதுப்பிக்கவும், முதலீடு செய்யவும், சொத்துக்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.