துலாம் ராசி அன்பர்கள், இன்று நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நன்மை பெற உதவும், தொழில் வியாபாரத்தில் இலக்கை எளிதாக நிறைவேறும், ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்.
எடுத்த காரியமும் நல்லபடியாகவே நடக்கும், அதே போல கொஞ்சம் மன கவலை இருக்கும், எதைப் பற்றியும் கவலைப் படாமல் காரியத்தை மட்டும் எதிர்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும், ஆசிரியரின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உதவும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் ஊன்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம்