Categories
மாநில செய்திகள்

#BREAKING : மாநிலங்களவை தேர்தல்….. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், 2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்காக 4 இடங்களில் இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், இரா கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிக்கள் டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

Categories

Tech |