திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் தேவஸ்தானம் சார்பாக உணவு, நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாத வகையில் மாடவீதிகளில் நீர் பந்தல்கள் வெள்ளை நிற குளிர்ச்சி பெயிண்ட் சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அஷ்டதள பாத பத்மா ராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Categories