நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் கேன் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இணைந்து கேன் திரைப்பட விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அக்ஷய்குமார் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதித்த அக்ஷய்குமாருக்கு தற்போது மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.