தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் மூன்று வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தொற்றின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை.
கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு நாளும் 300 நபர்களுக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8,000 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காரணத்தால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், அதிகளவில் அதன் தாக்கம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.