Categories
உலக செய்திகள்

உக்ரைன் படைகள் அதிரடி…. பதிலடியை சமாளிக்க முடியாமல்…. கார்கீவிலிருந்து வெளியேறிய ரஷ்யப்படைகள்…!!!

ரஷ்ய படைகள், உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கார்கீவ் நகரிலிருந்து பின் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் கார்கீவ் என்ற முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யப்படை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. கார்கிவ் நகரமானது, அந்நாட்டின் கோட்டை நகரம் எனப்படுகிறது. ரஷ்ய படையினர் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக முயற்சி மேற்கொண்டும், அவர்களால் கார்கீவ் நகரை கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யப்படைகளை எதிர்த்து அதிரடியான பதில் தாக்குதலை தொடங்கியது. அதனை எதிர்கொள்ள முடியாமல் ரஷ்யப் படைகள் கார்கீவ் நகரிலிருந்து பின்வாங்கி விட்டது. இதனைத்தொடர்ந்து, அந்நகரத்தில் வசித்த மக்கள் மீண்டும் அங்கு திரும்பி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |