நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பாறை சரிந்தது. இதில், கற்கள் ஏற்றி சென்ற லாரி மற்றும் பாறை அள்ளும் இயந்திரங்கள் சிக்கி கொண்டன. இதில், டிரைவர்கள், தொழிலாளர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.