Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்…. 1 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மதிப்பெண் பட்டியல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே அதை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நோய் தொற்று குறைந்ததையடுத்து ஓரிரு இடங்களில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து 1 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டு, தற்போது இறுதி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் மே 13-உடன் நிறைவுபெற்றன. இந்நிலையில்,நேற்று முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைப் பற்றி பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு விடைத்தாள்களை வருகின்ற மே 27-ஆம் தேதிக்குள் திருத்தி, மதிப்பெண் பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதையடுத்து மே 28-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்ச்சி பதிவேடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அதற்கான குறிப்பிட்ட இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர்கள் மே 20-ஆம் தேதி வரை பள்ளிக்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும். இவ்வாறு கல்வித்துறை இவ்வறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |