படகு கடலில் கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குறும்பனையில் மீனவரான ஏசுதாசன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் என்பவருடன் கட்டுமர படகில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதனால் கட்டுமரம் கவிழ்ந்து இரண்டு பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
இதில் வின்சன்ட் நீந்தி கரைக்கு வந்தார். உடனடியாக வின்சென்ட் உறவினர்களுடன் வேறு படகில் விரைந்து சென்று ஏசுதாசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ஏசுதாசனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.