மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சியை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சியை ஆரம்பித்தது. தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு துறை இளநிலை அலுவலர் செங்கதிர் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசினார். மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு பங்கேற்று பயிற்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, சங்கராபுரம் தாலுகாவிலுள்ள கிராமத்தில் விவசாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். இதனால் கல்வியறிவு குறைவாக இருப்பதால் போட்டி தேர்வு எழுதுவதற்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. எனவே பயிற்சி அளிக்கப்பட்டு கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பி.எல் ராஜ் அகடமி பயிற்சியாளர் மலர்மன்னன் கலந்து கொண்டு பயிற்சி அளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் திருமலை, அண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் மற்றும் சங்கராபுரம் வட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பயிற்சி சனி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.