Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…கடுமையாக உழைப்பீர்கள்…நட்பால் ஆதாயம் பெறுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று  பலரும் உங்களை அன்பு பாராட்டக் கூடும், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், தாராள அளவில் பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணாமல் தேடிய பொருளை இன்று  அதிர்ஷ்டவசமாக கிடைக்க பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள், எதையும் சாதிக்கும் திறமையும் ஏற்படும். வெளியில் தங்கும் சூழல் உருவாகும். எடுத்த காரியத்தை செய்யும் போது, எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் கொஞ்சம் ஏற்பட்டாலும், உங்களுடைய அபார திறமையால் அதை பக்குவமாக செய்து முடிப்பீர்கள். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படவேண்டிய சூழல் இருக்கும். திருமண முயற்சியும் இன்று நல்ல படியாகவே  நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கு.  அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |