தமிழகத்தில் 76.35 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்ப தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 30ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 73 ஆயிரத்து 803 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள உள்ள கல்லூரி மாணவர்கள் 17 லட்சத்து 32 ஆயிரத்து 820 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 82 ஆயிரத்து 193 பேரும் உள்ளனர். வேலை என்பது கிடைக்காவிட்டால் சொந்தமாக சிறுதொழில் தொடங்கி வாழ்வை வெல்லலாம்.