இலங்கையில் புதிய திருப்பமாக அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி, நாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வரும் 17-ம் தேதியன்று முக்கியமாக மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நம்பிக்கை தரும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதேபோன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது எதிரான கருத்துக்கள் தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தின் மீதும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.