Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அமர்ந்து வேலை பார்க்க முடியல” பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பீடி சுற்றும் தொழிலாளியான திருமலை வடிவு(40) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திருமலை வடிவு கடுமையான முதுகுவலியால் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் இவரது முதுகுவலி குணமடையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை வடிவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |