Categories
கன்னியாகுமாரி

படித்த முதல் தலைமுறை…தொழில் முனைவோருக்கு ரூ 5 கோடி வரை கடன் உதவி…. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ 5 கோடி வரை கடன் உதவி கொடுக்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, மாவட்ட தொழில் மையம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட புதிய தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டம், பட்டயம் ஐ.ஐ.டியை தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு வசதியாக இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் உற்பத்தி சேவை சார்ந்த தொழில் புரிவோருக்கு10 லட்சம் முதல் 5 கோடி வரை 25 சதவீதத்தில் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க உதவப்படும். கடன் பெறுபவர்கின்றவர்களில் பொதுப்பிரிவினருக்கு 10%, சிறப்பு பிரிவினரின் உள்ள பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர்,முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்,  மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 % சொந்த முதலீடு செய்து இருக்க வேண்டும். மேலும் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்துகின்ற தொழில்முனைவோருக்கு கூடுதல் சலுகை என்ற முறையில் 3 சதவீதம் வட்டி மானியம் கொடுக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்ற பொதுப்பிரிவினர் 21 வயது முதல் 35 வயதும், சிறப்பு பிரிவினர் 21 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 வருடங்களாக வசித்து இருக்க வேண்டும். இதன் மூலம் பயன்பெற ஆர்வம் இருக்கின்ற தொழில்முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கச்சேரி ரோடு, மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |