Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“செங்கல்பட்டு சுங்கசாவடி” தமிழனுங்களே இல்லை…. அசிங்கமா பேசுறானுங்க…. நிரந்திரமாக மூடு…. பொதுமக்கள் ஆவேசம்…!!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை கலவரத்தை தொடர்ந்து அதனை நிரந்திரமாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மோதல் நடைபெற்ற நிலையில் இன்று வரை கட்டணம் வசூல் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிக அளவில் வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக   குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இங்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆட்களை பார்க்கையில் ரவுடி தொழில் செய்பவர்களை போல் இருக்கிறது. மிகவும் அநாகரிகமாக பேசுவார்கள். குடும்பம் பிள்ளைகள் என இருப்பவர்கள் இதுபோன்ற அடாவடியில் ஈடுபட மாட்டார்கள் இது இந்த முறை மட்டுமல்ல தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடியில் அடாவடித்தனம் தான் நிகழ்கிறது என்று  ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.

Categories

Tech |