ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரங்கள் வைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பொருள்களிலிருந்து வழங்கப்படுகின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் கொள்முதல் விலையிலிருந்து ரூபாய் 17 அதிகம் வைத்து ரேஷன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இப்படி அதிகம் வசூல் செய்யப்படும் தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகின்றது.
மேலும் நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கரீம் கல்யாண் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எலக்ட்ரானிக் எடை மிஷின்கள் மூலமாக மட்டுமே உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.