விக்ரம், ரஞ்சித் இணையும் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னையே அற்பணித்துக் கொள்வார். இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகான். விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.
சென்ற வருடம் விக்ரம், இயக்குனர் ரஞ்சித் இணைய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க க்ரீன் ஸ்டூடியோ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கதையை ஹாலிவுட் ஸ்டைலில் விஜய்க்காக எழுதி இருந்த நிலையில் விக்ரமிடம் இந்த கதையைச் சொல்ல விக்ரமுக்கு அது மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் சீயான் 61 திரைப்படம் உருவாகுகின்றது என ரஞ்சித் கூறியுள்ளார்.