சமீபகாலமாக பணவீக்கம் பயங்கர நெருக்கடி கொடுத்து வருகின்றது. அது சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் மத்தியில் சிரமத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள் பணவீக்கத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக பணத்திற்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வழங்க ஒரு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி லண்டனை சேர்ந்த நிதி சேவைகள் நிறுவனமான டேலி மணி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தனது ஊழியர்கள் அனைவருக்கும் தங்கத்தில் சம்பளம் வழங்குவதற்கு முடிவு எடுத்துள்ளார்.
இது அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். அதனால் சோதனை அடிப்படையில் தங்கத்தில் சம்பளம் கொடுத்து பார்க்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி முடிவு செய்துள்ளார். இதையடுத்து விருப்பப்பட்ட ஊழியர்கள் இனி சம்பளத்திற்கு பதிலாக தங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பணவீக்கம் காரணமாக விலைவாசி மற்றும் செலவுகள் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. இதற்கு மத்தியில் சாதாரண பலத்தில் சம்பள உயர்வு வழங்குவது நியாயமில்லை என்றும் காலம் காலமாக பணவீக்கத்தை எதிர்கொள்ளும் ஆயுதமாக தங்கம் பயன்படுவதால் சங்கத்தில் சம்பளம் கொடுப்பது சரி என்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.