ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி(42) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் காளீஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினத்திலிருந்து லட்சுமணனை காணவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளீஸ்வரி கொலை செய்யப்பட்டாரா? லட்சுமணன் எங்கே சென்றார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.