Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்க போகுது…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், தருமபுரி, தி.மலை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் சில இடங்களில் மழை பெய்யும்.

குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.    அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |